search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக் கட்சி கூட்டம்"

    மழைக்கால கூட்டத்தொடரைப் போன்று குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ம் தேதி தொடங்கி டிசம்பர் 23ம் தேதிவரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக, 28ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் விவகாரம், விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. அதேபோல் குளிர்கால கூட்டத்தொடரிலும் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 

    குறிப்பாக, மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மீதே அனைவரின் பார்வையும் இருக்கும். இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி கடந்த வாரம் அறிவித்தார். இந்த வார இறுதியில், மூன்று சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #Allpartyresolution #PulwamaAttack
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியது. இதில் கலந்து கொள்ளுமாறு நாடு முழுவதும் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. நிதி மந்திரி அருண்ஜெட்லி  மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் தொடர்பான விவரங்களை ராஜ்நாத் சிங் எடுத்துக் கூறினார். எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம்? என்பது குறித்து அனைத்து கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்தனர்.

    பின்னர், இன்றைய கூட்டத்தில் எல்லா வகையிலான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
     
    ‘இந்திய எல்லையின் மறுபுறத்தில் உள்ள சக்திகளால் பயங்கரவாதம் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெரும் சவாலான இந்த பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா நிலையான எதிர்நிலைப்பாட்டை கையாண்டு வருகிறது.



    இந்த சவால்களை எதிர்கொண்டு போராடி வெல்ல ஒட்டுமொத்த நாடும் ஒரே குரலில் சபதமேற்கிறோம். அனைத்து வகைகளிலான பயங்கரவாதம் மற்றும் எல்லையின் மறுபகுதியில் இருந்து பயங்கரவாதத்துக்கு அளிக்கப்படும் ஆதரவை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நமது பாதுகாப்பு படையினருக்கு நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, உறுதுணையாக நிற்போம்’ என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #allpartyresolution #PulwamaAttack
    அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் பங்கேற்பதற்காக கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    சென்னை:

    காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது, பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதினான். இந்த குண்டு வெடிப்பு விபத்தில் 40 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர்.

    இந்த கொடூர செயலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறார்கள்.



    இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

    டெல்லியில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி., டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. எனவே, நேற்று மாலை, தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற கனிமொழி அதே விமானத்தில் சென்னை திரும்பினார்.

    இது போல் திரிசூலம், பொழிச்சலூர் பகுதியில் நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்களில் பங்கேற்க இருந்த டி.ஆர்.பாலு அந்த கூட்டங்களை ரத்து செய்து விட்டு சென்னை விமான நிலையம் வந்தார். பின்னர் இருவரும் டெல்லி புறப்பட்டு சென்றனர். #PulwamaAttack #AllPartyMeet #DMK #Kanimozhi #TRBaalu
    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக வருகிற 10-ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. #ParlimentWinterSession #OppositionParties
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 11-ந் தேதி தொடங்கி ஜனவரி 8-ந் தேதி வரை நடக்கிறது. பொதுத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் முழுமையான கூட்டத் தொடர் இது என்பதால் பாராளுமன்ற இரு அவைகளையும் சுமுகமாக, ஒருமித்த கருத்துடன் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.

    இதைத்தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளான 10-ந் தேதி டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து உள்ளது.

    கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல்களை குறிப்பிட்டு அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொள்வது மரபாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடி 10-ந் தேதி கூட்டத்தில், சபை அமளி இன்றி சுமுகமாக நடைபெறவும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஆதரவு அளிக்கும்படியும் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுப்பார்.



    குறிப்பாக மாநிலங்களவையில் நிலுவையில் கிடக்கும் உடனடி முத்தலாக் மசோதாவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும். இது தொடர்பாக மத்திய அரசு ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பித்து இருப்பது நினைவு கூரத்தக்கது.

    இதேபோல் இந்திய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்த மசோதா, கம்பெனிகள் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் இந்த தொடரில் நிறைவேற்ற பா.ஜனதா அரசு முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குளிர்கால தொடருக்காக பாராளுமன்றம் கூடும் தினத்தில், அண்மையில் தேர்தல் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பதால் அன்று ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனல் பறக்க மோதிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

    வழக்கமாக நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால் கடந்த ஆண்டைப் போலவே இந்த வருடமும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த ஆண்டு தொடர் தாமதமாக தொடங்குவதற்கு 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. #ParlimentWinterSession #OppositionParties
    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin #AllPartyMeeting
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை ஒன்றை ரூ.6 ஆயிரம் கோடி செலவில் கட்ட முடிவு செய்துள்ளது.

    இதற்கான வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். மேலும் தமிழக அரசு நாளை இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளது.

    இந்த நிலையில் மேகதாது பிரச்சனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை தி.மு.க. இன்று கூட்டியது. அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. உள்பட 9 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் கஜா புயலின் கோர தாண்டவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் எழுந்து நின்று அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.



    கூட்டத்தில் மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகத்தில் மிச்சமிருக்கும் விவசாயத்தையும் அழித்தொழித்து, குடிநீர் சேகரிப்பதற்காக ஏற்கனவே தாய் மார்கள் அனுபவித்து வரும் துன்பங்களைப் பன்மடங்கு பெருக்கிடும் வகையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு, அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

    5,912 கோடி ரூபாய் மதிப்பில் 66 டி.எம்.சி. காவிரி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட அணை கட்டுவதும், அதன் மூலம் அம்மாநிலத்தின் விவசாய நிலப்பரப்புகளை மேலும் மேலும் விரிவுபடுத்திக் கொள்ளத் திட்டமிடுவதும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும் அந்த இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கும் முற்றிலும் எதிரானது.

    காவிரி விவகாரத்தில் தொடக்கம் முதலே நீதிமன்றங்களின் தீர்ப்புகளைச் சிறிதும் மதிக்காமலும் அவற்றிற்கு எதிராகவும் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக மாநில அரசு, தமிழகத்தின் கருத்தினைக் கேட்காமல் புதிய அணை கட்டுவது, இரு மாநிலங்களின் நெடுங்கால நல்லுறவிற்கும் கூட்டாட்சிக் கொள்கைக்கும் குந்தகம் விளைவிக்கும் முயற்சி என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் எடுத்துக்காட்ட விரும்புகிறது.



    தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கட்சி பேதம் கருதாமல் பொது நலனுக்காக ஒன்றிணைந்து, பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.

    அதுமட்டுமன்றி, தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஏகோபித்த உணர்வுகளையும் ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வுகளையும் உதாசீனப்படுத்திவிட்டு, தேர்தல் ஆதாயம் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு “நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகம் அல்லது தமிழகம் புதிய அணை எதுவும் கட்டக்கூடாது. காவிரி விவகாரத்தில் அனைத்து முடிவுகளையும் வாரியமே எடுக்கும். மத்திய அரசுக்கு இதில் தலையிடும் அதிகாரம் கிடையாது” என்றும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக, கர்நாடகாவில் புதிய அணை கட்ட மத்திய பா.ஜ.க. அரசு அனுமதி வழங்கியிருப்பது, தமிழகத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சியாகும்.

    மத்திய அரசின் இந்த அனுமதி, காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கி, கார்ப்பரேட்டுகளின் பெட்ரோலியப் பொருள்கள் வேட்டையை ஊக்கப்படுத்தி, தமிழகத்தின் வேளாண் பொருளாதார முன்னேற்றத்தைத் தரை மட்டமாக்கிப் புதைத்து விடும் படுபயங்கர வஞ்சக நடவடிக்கையின் பிரதிபலிப்பே ஆகும்.

    “கடிதம்” எழுதி விட்டாலே “கடமை” முடிந்து விட்டது என்று அ.தி.மு.க. அரசு, அலட்சியத்தின் மொத்த உருவமாக இருந்ததால்தான் இன்றைக்கு, மத்திய அரசு விளைவுகளைப் பற்றிய சரியான மதிப்பீடும் பார்வையும் இல்லாமல், இந்த அனுமதியை சர்வ சாதாரணமாக வழங்கி தமிழக மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது; வெந்தணலில் தள்ளுகிறது.

    மாநில உரிமைகளை- மத்திய அரசிடமும், அண்டை மாநிலங்களிடமும் அ.தி.மு.க. அரசு பறிகொடுத்துக் கொண்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தீராத தொல்லையாகவும், தீர்க்க முடியாத வாழ்வாதாரப் பிரச்சனையாகவும் மாறும் பேரிடர் உருவாகி வருகிறது.

    அடிக்கடி மத்திய அமைச்சர்களையும், பிரதமரையும் சந்திக்கும் அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் “மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என்று அறிவித்தாலும், மேகதாது அணை கட்டுவதற்கான மத்திய அரசு அனுமதியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வேதனையுடன் பதிவு செய்து, தங்கள் சுயநலத்தைத் தவிர, மாநிலத்தின் பொதுநலன் பற்றிக் கவலையில்லை என்ற போக்கில் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு தமிழகத்திற்குப் பெருந்தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கிறது என்று ஆழ்ந்த கவலை கொள்கிறது.

    எனவே, மேகதாதுவில் புதிய அணை கட்டும் கர்நாடகாவின் “விரிவான திட்ட மதிப்பீட்டறிக்கை” தயாரிப்பதற்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், இது போன்று தன்விருப்பம் போல் புதிய அணை கட்டி தமிழகத்தின் விவசாயத்தையும், குடிநீர்த் தேவையையும் வஞ்சிக்கும் முயற்சிகளில் கர்நாடக மாநில அரசு ஈடுபடக் கூடாது எனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

    அ.தி.மு.க. அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி இந்த அனுமதியை ரத்து செய்ய தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுமட்டுமல்லாமல், நடைபெற இருக்கின்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகத்தைப் பாதிக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான போக்கிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டி இந்த அனுமதியை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமெனவும் அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

    மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி வருகின்ற 2018 டிசம்பர் 4-ந்தேதி (செவ்வாய்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி மாநகரில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் தி.மு.க. சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டனர். திராவிடர் கழகம் சார்பில் வி.அன்புராஜ், கலிபூங்குன்றம் பங்கேற்றனர்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், மு.வீரபாண்டியன்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., யூசுப் குலாம் முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பொதுச்செயலாளர் அப்துல் சமது, பொருளாளர் கோவை உமர் உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். #DMK #MKStalin #AllPartyMeeting
    மேகதாது அணை தொடர்பாக திருச்சியில் டிசம்பர் 4-ந்தேதி திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அனைத்து கட்சி கூட்டம் 24 மணி நேரத்துக்குள் கூட்டப்பட்ட கூட்டம். ஏற்கனவே ஒத்த கருத்துடைய கட்சிகளை அணுகி இந்த கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கலந்து பேசிய நேரத்தில் உடனடியாக இந்த கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.

    மற்ற கட்சிகளை ஏன் அழைக்கவில்லை? என்ற ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

    எனவே மற்ற கட்சிகளை எல்லாம் அழைக்க கூடிய அளவுக்கு நேரம் இல்லாத காரணத்தால் நாங்கள் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்து பல்வேறு நிலைகளில் ஒன்று சேர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கொண்டிருக்க கூடிய கட்சிகளோடு சேர்ந்து இந்த கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

    இந்த கூட்டத்தின் துவக்கத்தில், அண்மையில் கஜா புயலினால் உயிரிழந்த தோழர்களுக்கு, விவசாயிகளுக்கு, அஞ்சலி செலுத்தக் கூடிய வகையில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று எங்களுடைய அஞ்சலியை செலுத்தி உள்ளோம்.


    இந்த கூட்டத்தின் தீர்மானமாக, மேகதாது விசயத்தில் உடனடியாக தமிழக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை மாநில அரசு கூட்டி, ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு உடனே அனுப்பி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் வருகிற டிசம்பர் 4-ந்தேதி திருச்சியில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்க கூடிய வகையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்.

    நியாயமாக இந்த ஆர்ப்பாட்டத்தை டெல்டா பகுதியில்தான் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும்.

    எனவேதான் திருச்சியில் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி பேதங்களை மறந்து கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    டெல்டா பகுதியில் உள்ள மக்களும் விவசாயிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். முதற்கட்டமாக இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்து உள்ளோம். அனைத்து கட்சி தலைவர்களும் அதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

    கே:- சிறிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படுமா?

    ப:- அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இப்போது உங்கள் மூலமாகவும் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

    கே:- பாரதிய ஜனதா கட்சி, அ.ம.மு.க. போன்ற கட்சிக்கு அழைப்பு விடுப்பீர்களா?

    ப:- வந்தால் வரவேற்கிறோம்.

    (வைகோ குறுக்கிட்டு) மேகதாது விஷயத்தில் கேடு செய்ததே பாரதிய ஜனதா அரசுதான். அவர்களை எப்படி அழைப்பது? என்றார்.   #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை அண்ணா அறிவாலயத்தில் மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது. #MekedatuDam #DMK #MKStalin
    சென்னை:

    கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முடிவு செய்துள்ளது. புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    இது தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேகதாது பிரச்சனை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியான தி.மு.க. அனைத்துக் கட்சி தலைவர்களின் கருத்தை அறிய முடிவு செய்தது. இதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

    அதன்படி அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் கூடியது.

    கூட்டத்திற்கு மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அவருடன் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அபுபக்கர் எம்.எல்.ஏ., திராவிடர் கழகம் சார்பில் கலிபூங்குன்றன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 9 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தலைவர்கள் பேசினார்கள்.

    கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் தே.மு. தி.க., பா.ம.க., த.மா.கா., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் கலந்து கொள்ளவில்லை.

    ஆளும் கட்சியான அ.தி.மு.க., பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. #MekedatuDam #DMK #MKStalin
    வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது.
    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகள் தொடங்கப்பட உள்ளன. அதற்காக நாளை (சனிக்கிழமை) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்த பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரிதானா? என்பதையெல்லாம் சரிபார்த்து திருத்திக்கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது.

    வருகிற ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயதை பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்களும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதோடு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதற்கும் இந்த காலகட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் ஜனவரி 1-ந்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடக்கும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதுண்டு. ஆனால் இந்த முகாம் கள் குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.

    இந்த நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூட்டியுள்ளார். வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த கருத்துக்களை கட்சி பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.
    ×